விநாயகர் அகவல்
சீதக் களம்பச் செந்தாமரைப்பூம்
பாதச் சிலம்பு பல இசைப்பாடப்
பொன்னரை ஞானும் பூந்துகிலாடையும்
வண்ணமருங்கில் வளர்ந்தழகெறி;ப்பப்
பேழை வயிறும் பெரும் பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந்துரமும்
ஐந்துகரமும் அங்குசபாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும் திரண்ட முப்புரி நூல்
திகழொளி மார்பும் சொற்பதங் கடந்த
துரிப மெய்ஞ்ஞான அற்புத நின்ற
கற்பகக் களிறே
முப்பழ நுகரும் மூசீக வாகன
இப்பொழுதென்னை யாட்கொள வேண்டித்
தாயாயெனக்குத் தானெழுந்தருளி
மாயாப்பிறவி மயக்கமறுத்து
திருந்திய முதலைந்தெழுத்துந்
தெளிவாய் பொருந்தவே வந்தெனுளந்தனிர் புகுந்து
குருவடிவாகிக் குவலயந்தன்னில்
திருவடி வைத்துத் திரமிது பொருளென
வாடாவகைதான் மகிழ்ந்தெனக்கருளி
கோடாயுதத்தாற் கொடுவினைகளைந்தே
உவட்டா வுபதேசம் புகட்டியென் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையுங்காட்டி
ஐம்புலன்தன்னை அடக்குமுபாயம்
இன்புறுங்கருணை இனிதெனக்கருளிக்
கருவிகளொடுக்கும் கருத்தினையறிவித்
திருவினைதன்னை அறுத்திருள்கடிந்து
தலமொருநான்குந் தந்தெனக்கருளி
மலமொருமூன்றின் மயக்கமறுத்தே
ஒன்பதுவாயில் ஒருமந்திரத்தால்
ஐம்புலக்கதவை யடைப்பதுங்காட்டி
ஆறாதாரத் தங்குசநிலையும்
பேறாநிறுத்தி;ப் பேச்சுரையறுத்தே
இடைப்பிங்கலையி னெழுத்தறிவித்துக்
கடையிற் சுழிமுனைக் கபாலமுங்காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய
தூணின்
நான்ரெழுபாம்பின் னாவிலுணர்த்திக்
குண்டலியதனிற் கூடியவசபை
விண்டெழுமந்திரம் வெளிப்படவுரைத்து
மூலாதாரத்தின் மூண்டெழுகனலைக்
காலாலெழுப்புங் கருத்தறிவித்தே
அமுதநிலையும் ஆதித்தனியக்குமும்
குமுதசகாயன் குணத்தையுங்கூறி
இடைச்சக்கரத்தின் உறுப்பையுங்காட்டி
சண்முகதூலமுஞ் சதுர்முக சூட்சமும்
எண்முகமாக வினிதெனக்கருளி
என்னையறிவித் தெனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக்களைந்து
வாக்கு மனமும் இல்லா மனோலயம்
தேக்கியேயென்றன் சிந்தை தெளிவித்
திருள்வெளியிரண்டுக் கொன்றிடமென்ன
அருள் தருளானந்தத் தழுத்தியென் செவியில்
எல்லையில்லா வானந்தமளித்து
அல்லல்களைந்தே யருள் வழிகாட்டிச்
சத்தத்தினுள்ளே சதா சிவங்காட்டி
சித்தத்தினுள்ளே சிவலிங்கங்காட்டி
அணுவிற்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமுநீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த்தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக்கரத்தின் அரும் பொருட்ன்னை
நெஞ்சக்கரத்தினிலை யறிவித்துக்
தத்துவ நிலையைத் தந்தெனையாண்ட
வித்தக விநாயக விரல்கழல் சரணே....
ஓம் உலக சாந்தி.....
ஓம் உலக சாந்தி.....
ஓம் உலக சாந்தி.....
No comments:
Post a Comment