Saturday, October 31, 2015

அறம் செய்பவர் அந்தணர்! பிராணாயாமம் செய்பவர் பிராமணர்!


சக தோழமைகளுக்கு வணக்கம்!


அறம் செய்பவர் அந்தணர்! பிராணாயாமம் செய்பவர் பிராமணர்! ஒருவருடைய அல்லது ஒருத்தியினுடைய செயல் அதாவது நடத்தைதான் அவர்களை நமக்கு இன்னார் என்று அடையாளப்படுத்தி காட்டுகிறது! பொதுவா நாம் எந்த சாதியில் பிறந்தோம் என்பது முக்கியமல்ல! என்ன நாம் செய்கிறோம் என்பதுதான் முக்கியம்!  

எண்ணம் சொல் செயல் இம்மூன்றும்தான் நம்முடைய சாதியை தீர்மானிக்கின்றது! சுதந்திரம் நமது பிறப்புரிமை என்பதுபோல் எண்ணுவதும் சொல்லுவதும் செய்வதும் அவரவர் பிறப்புரிமையே! சமதர்மம் வேண்டுமென்றால் தாழ்வு மனப்பான்மையை வஞ்சகமாக விதைக்கும் கயவரை இனங்கண்டு களை எடுக்க வேண்டும்!

உள்ளுவதெல்லாம் உயர்வாக இருக்க வேண்டும்! உள்ளத்தில் உறுதி இருக்குமானால் உங்களை யாரால் தாழ்த்த முடியும்? 

எண்ணத்தை பார்ப்பவன் பார்ப்பான்! எண்ணத்தை திறம்பட செய்து முடிப்பவன் சத்திரியன்! எண்ணத்தை கையாள்பவன் வைசியன்! எண்ணத்தை எதிர்கொள்ள முடியாமல் எண்ணத்தின் பின் அலைபவன் சூத்திரன்! இப்பொழுது புரிகிறதா எண்ணம்தான் நம்முடைய சாதியை தீர்மானிக்கின்றது!

உதாரணமாக தீய எண்ணம் உங்களுக்குள் வருமாயின் அந்த எண்ணத்திற்கு உடன்பட்டால் முதலில் பாதிக்கப்போவது மனம், பிறகு உங்கள் வாக்கு, அதாவது சொற்களை பாதிக்கும், பிறகு உங்கள் நடத்தை அதாவது செயலையும் பாதிக்கும்! இப்பொழுதுதான் நீங்கள் அவப்பெயருக்கு ஆளாகின்றீர்கள்! 

இப்படி கீழான எண்ணங்களை கைகொள்பவர் கீழ்சாதிக்காரர்கள் மேலான எண்ணங்களை கையாள்பவர்மேல்சாதிக்காரர் என்றால் அது மிகையாகாது! 

யாம் மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால் மேலே வானம்.... கீழே பூமி..... உங்களை தாழ்த்த யாரால் முடியும்? எண்ணம் சொல் செயல் இம்மூன்றும் சரியாக இருக்குமாயின் அதன் விளைவுகளும் சரியாக இருக்கும்! என்பது எம்முடைய தாழ்மையான கருத்து!


நன்றி வணக்கம்! 
இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்!




1 comment:

  1. மிக அருமையான சிந்தனை
    வாழ்த்துகள்.

    ReplyDelete