Thursday, November 5, 2015

முதலில் மாட்டிறைச்சிக்காகவே மாடு மேய்க்க துவங்கினாய்.....



ஏதோ பஞ்சம் வந்த காலத்தில்
மழை பொய்த்த நேரத்தில் 
ஆடு மாடு கோழிகளை ருசி பார்த்த  மனிதனே.....

பஞ்சம் போன பிறகும் நீ
மழை பொழிந்த பிறகும் நீ
காய் கனிகளை கண்ட நீ
செடி கொடிகளை உண்ட நீ
ஊண் உடலைத் தேடி நீ
குக்கல் போல் அலைவது ஏனோ?

ஆரம்பத்தில் பசித்தீயை அணைக்கவே
ஆடு மாடு அனைத்தையும் பச்சையாக உண்ட நீ...
நெருப்பு வந்த பின்னரே சுட்டுத் திண்ண துவங்கினாய்....

முதலில் மாட்டிறைச்சிக்காகவே மாடு மேய்க்க துவங்கினாய்.....
எருதின் பலம் தெரிந்ததும் 
ஏர் பூட்டி ஓட்டினாய்.....
சக்கரம் வந்த பின்னரே 
மாட்டு வண்டி ஓட்டினாய்....

பசுவுடன் பழகியே பால் கரக்க துவங்கினாய்.....
பால் கரந்த பசுவெல்லாம் மாட்டுப்பால்
மாட்டுக்கே என்று அடம்பிடிக்கவில்லையே....

பசுவிடம் பால்கரந்த மனிதனே
இரத்தம்தான் பால் என்பதை 
எப்பொழுது உணர்வாயோ....

பால்தந்த பசுவெல்லாம் வாழ்நாள் முழுக்க பணியவே...
பாலே உணவென ஆனபின் பால்குடித்த மனிதனே... 
நீயும் கொழுக்க துவங்கினாய்.....

பாலின் பயன் உணர்ந்த நீ
பாலுடன் இனிப்பு சேர்த்து பருகினாய்...

பாங்காய் பாலைக் காய்ச்சியே
பால் சோறு அருந்தினாய்...

பசி தீர்த்த பாலை நீ வகையரிந்து
உணவில் கலக்கவே நீயும் நுகர துவங்கினாய்.....

புளித்த உன் விரல் பட்டதும்
பால் மறுநாள் தயிரானதும்
உன் கண்டுபிடிப்பே....

பால் சோறு உண்ட நீ
தயிரின் வருகையால் தயிர்  சோறுக்கு
மாறினாய்.....

பால் தந்த பசுவையும் 
ஏர் பூட்டிய மாட்டையும் தெய்வமாக மாற்றினாய்.....

பால் வணிகம் செய்யவே 
பாலுடன் நீரை கூட்டினாய்....
பால் கூடுதல் ஆனதால்
பாங்காய் வியாபாரம்; பெருக்கினாய்.....

பாலை நீயும் கூட்டவே
பாலுடன் நீரை கலந்த நீ
தயிர் வணிகம் பெருக்கவே
தயிருடன் நீரை கூட்டீனாய்.....
அச்சச்சோ....
தயிர்  மோரும் ஆனதே......

மோரை மோர்ந்த மனிதனே
மோரை பருக துவங்கினாய்....

பால் சோறு கண்ட நீ
தயிர்  சோறு உண்ட நீ
மோர்  சாதம் உன் புதுப்படைப்பே....

தாகம் தீர்த்த மோரினால் உன் 
பித்தமும் தணிந்து போனதே...
பித்தம் தெளிந்த மோரினால்
உன் சித்தமும் தெளிந்து போனதே...
உன் சித்தம் தெளிந்து போனதால்
மோரை குடிக்க பழகினாய்....

மோரை பருகும் போது நீ
மோரில் மிதக்கும் மிதவையை
மெல்ல சேர்க்க துவங்கினாய்....
சேர்த்து வைத்த மிதவையை 
மெல்ல திண்ண பழகினாய்....

எண்ணெய் வாடை வீசியதால்
மிதவையை வெண்ணை என 
அழைத்திட்டாய்....
வெண்ணை உண்ட வாயினால்
மண்ணளக்க முடியுமே....
மண்ணளக்கும் வித்தையை
வெண்ணை தந்து உதவுமே....

மோரை கடைந்த மனிதனால்
வெண்ணை எடுக்க முடிந்தது....
வெண்ணை உண்ட வாயினால்
மாடு திண்ண முடியுமோ?

வெப்ப கண்ட வெண்ணையும்
முறையாய் உருகிப்போனதே....
நீர்  பிரிந்து போனதால்
வெண்ணை நெய்யும் ஆனதே...

உண்ணும் உணவில் அனைத்திலும்
நெய் சேர்க்க துவங்கினாய்...
நெய் சேர்த்த உணவெல்லாம்
நெய் மணக்க செய்திட்டாய்....

நெய்யை உண்ட மனிதனால்
மாட்டைக் கொல்ல முடியுமோ...
மாட்டைக் கொல்லும் மனிதனே...
உனக்கு நெய்யின் குணம் தெரியுமோ?

நெய்யின் குணம் தெரிந்தவனே
மாட்டை மதிக்க துவங்குகிறான்....

பஞ்சம் வந்த காலத்தில்
பட்டினையை போக்கவே
மாடு திண்ற மனிதர்களே....
உப்பு நெருப்பு இன்றியே...
மாட்டிறைச்சி திண்ணுங்களேன்.....

இறந்து போன பெண்ணை நீ
புணர்ந்து என்ன லாபமோ....
செத்துப்போன மாட்டை நீ
உண்டு என்ன லாபமோ?

ஏ மனிதனே...
பால் தந்த பசுவினை 
பால் மாறாமல் கொல்வது ஏனோ?

தயிரு தந்த தங்கத்தை கேவலம்
எலும்புக்காக கொல்வது ஏனோ?

மோர்  தந்த பசுவினை மோசம் செய்த மனிதனே.... 
மோட்சம் உனக்கு கிடைக்குமோ?

வெண்ணை தந்த பசுவினை வெட்ட
துணிந்த மனிதனே...
வெட்கப்பட வேண்டுமே....
மனிதனென்று சொல்லவே....

நெய் தந்த பசுவினை நெத்தியில்
அடிக்கும் போது என்ன வலி நேருமென்று நீயும் கொஞ்சம் நெனைச்சுப் பாரு........
நன்றி.....
வணக்கம்.....
இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்!

Saturday, October 31, 2015

அறம் செய்பவர் அந்தணர்! பிராணாயாமம் செய்பவர் பிராமணர்!


சக தோழமைகளுக்கு வணக்கம்!


அறம் செய்பவர் அந்தணர்! பிராணாயாமம் செய்பவர் பிராமணர்! ஒருவருடைய அல்லது ஒருத்தியினுடைய செயல் அதாவது நடத்தைதான் அவர்களை நமக்கு இன்னார் என்று அடையாளப்படுத்தி காட்டுகிறது! பொதுவா நாம் எந்த சாதியில் பிறந்தோம் என்பது முக்கியமல்ல! என்ன நாம் செய்கிறோம் என்பதுதான் முக்கியம்!  

எண்ணம் சொல் செயல் இம்மூன்றும்தான் நம்முடைய சாதியை தீர்மானிக்கின்றது! சுதந்திரம் நமது பிறப்புரிமை என்பதுபோல் எண்ணுவதும் சொல்லுவதும் செய்வதும் அவரவர் பிறப்புரிமையே! சமதர்மம் வேண்டுமென்றால் தாழ்வு மனப்பான்மையை வஞ்சகமாக விதைக்கும் கயவரை இனங்கண்டு களை எடுக்க வேண்டும்!

உள்ளுவதெல்லாம் உயர்வாக இருக்க வேண்டும்! உள்ளத்தில் உறுதி இருக்குமானால் உங்களை யாரால் தாழ்த்த முடியும்? 

எண்ணத்தை பார்ப்பவன் பார்ப்பான்! எண்ணத்தை திறம்பட செய்து முடிப்பவன் சத்திரியன்! எண்ணத்தை கையாள்பவன் வைசியன்! எண்ணத்தை எதிர்கொள்ள முடியாமல் எண்ணத்தின் பின் அலைபவன் சூத்திரன்! இப்பொழுது புரிகிறதா எண்ணம்தான் நம்முடைய சாதியை தீர்மானிக்கின்றது!

உதாரணமாக தீய எண்ணம் உங்களுக்குள் வருமாயின் அந்த எண்ணத்திற்கு உடன்பட்டால் முதலில் பாதிக்கப்போவது மனம், பிறகு உங்கள் வாக்கு, அதாவது சொற்களை பாதிக்கும், பிறகு உங்கள் நடத்தை அதாவது செயலையும் பாதிக்கும்! இப்பொழுதுதான் நீங்கள் அவப்பெயருக்கு ஆளாகின்றீர்கள்! 

இப்படி கீழான எண்ணங்களை கைகொள்பவர் கீழ்சாதிக்காரர்கள் மேலான எண்ணங்களை கையாள்பவர்மேல்சாதிக்காரர் என்றால் அது மிகையாகாது! 

யாம் மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால் மேலே வானம்.... கீழே பூமி..... உங்களை தாழ்த்த யாரால் முடியும்? எண்ணம் சொல் செயல் இம்மூன்றும் சரியாக இருக்குமாயின் அதன் விளைவுகளும் சரியாக இருக்கும்! என்பது எம்முடைய தாழ்மையான கருத்து!


நன்றி வணக்கம்! 
இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்!




Friday, October 30, 2015

தமிழ்நாட்டை தமிழர்களால் ஒருபோதும் ஆளமுடியாது!



தமிழ்நாட்டை தமிழர்களால் ஒருபோதும் ஆளமுடியாது! காரணம் தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என்பதற்க்காக யாம் மேற்படி கூறவில்லை ! தமிழர்களுக்கு இது ஒரு பொல்லாத காலம் என்றே சொல்ல வேண்டும்!

தமிழர்நாடு தமிழர்வசம் இருந்தால் காலம் நம்கையில் என்று பெருமிதம் கொள்ளலாம்..... ஆனால் காலத்தின் சாபமோ என்னவோ தமிழகத்தை ஆள்பவர்கள் தமிழரல்லாத மாற்று மொழி இனத்தவர்களே என்றால் அது மிகையாகாது ! 

மாற்று இனத்தவரின் சூழ்ச்சிகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு தமிழர்களுக்கு அறிவு இல்லை என்றே சொல்ல வேண்டும்! காரணம் அந்த அளவிற்கு ஆதிதமிழர்களின் மூளை மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது? அந்த அளவிற்கு தங்கள் மூளையை பயன்படுத்தும் மாற்று இனத்தவரின் ஒற்றுமை மெய்சிலிர்க்க செய்கிறது! இன்னொன்றும் கூற கடமைப் பட்டுள்ளோம் அதாவது தமிழ்நாட்டை தமிழர்கள் ஆள வேண்டுமென்றால் தமிழர்களுக்கு சில சிறப்பு தகுதிகள் வேண்டும். 

முதல் தகுதி பொய் சொல்ல தெரிந்திருக்கவேண்டும். 
இரண்டாவது தகுதி திருட தெரிந்திருக்கவேண்டும் பின் திருடியவுடன் பதுங்கும் தகுதி! மூன்றாவது தகுதி கொலை கொள்ளை ஊழல் லஞ்சம் லாவண்யங்களை சுவடு தெரியாமல் மறைக்கும் தகுதி!

நான்காவது தகுதி விபச்சாரம் செய்ய தன்னை அர்பணிக்கும் தகுதி. ஐந்தாவது தகுதி கணக்கில் வராத பணத்தை வசூல் செய்வது அல்லது மிரட்டி பிடுங்குவது! இல்லையேல் கள்ள கறுப்பு பணத்தை விபச்சாரத்தின் மூலம் சம்பாதிக்கும் தகுதி! 

இப்படி மேற்கூறிய தகுதிகள் தமிழர்களுக்கு என்றைக்கு கிடைக்கிறதோ! அன்றைக்குத்தான் தமிழர்களால் தமிழ்நாட்டை ஆளமுடியும்!

இந்த உண்மையை அறிவுமங்கிய படித்த பெரிய பதவி வகிக்கும் தமிழர்கள் உணர்வது கடினமே! காலத்திற்கேற்றார்போல் தங்கள் தகவமைப்பை மாற்றிக்கொள்ள முடியாத தமிழர்களின் கனவுகள் ஏக்கங்கள் புலம்பல்கள் எல்லாம் வெறும் கொக்கரிப்பாகவே போய்விட்டது! தமிழர்களின் நிலையோ அந்தோ பரிதாபம்!

மேற்கூறிய தகுதிகள் தமிழர்களுக்கு ஒருங்கே அமையாது என்பதும் காலத்தின் சாபக்கேடு என்பதா? விதி என்பதா? தமிழர்களின் பலகீனம் நன்றிவுணர்ச்சி, இந்த பலவீனமே எதரிக்கு பலம் என்பதை தமிழகத்தை ஆளும் மாற்று இனத்தவர்களுக்கு நன்றாக தெரியும் ஆனால் அறிவுமங்கிய படித்த அடிமை தமிழர்களுக்கு புரியாது! 

என்னடா தமிழர்களுக்கு எதிராக எழுதுகிறோம் என்று வருத்தப்பட வேண்டாம்! ஏன் என்றால் மேற்கூறிய தகுதிகள் தமிழர்களுக்கு கிடையாது அதனால்தான் தமிழ்நாட்டை தமிழர்களால் ஆளமுடியாது என்று தலைப்பை தேர்வு செய்தோம்!

ஒருவேளை படித்த சுயமிழந்த அறிவு மங்கிய தமிழர்களுக்கு தாங்கள் எவ்வளவு பெரிய பதவி வகித்தாலும் தாம் ஒரு சுயம் இழந்த அடிமை என்கிற அறிவு வருமாயின் சாண்றோர்களின் துணையோடு வரலாற்றை அறிந்து அவர்களின் வழி வந்தால் தமிழர்களுக்கு விடிவு காலம் எனலாம் இல்லையேல் இருண்ட காலமே!

யாம் ஏற்கனவே கூறியதுபோல் இது பொல்லாத காலம் பொய் களவு கொலை கொள்ளை விபச்சாரம் மேலோங்கி தர்மத்தை வீழ்த்தும் காலம்! ஆதலால் தமிழர்களே தர்மத்தில் நிலைத்திருங்கள் காலம் மாறும் தர்ம சக்கரம் நமக்கு துணை செய்யும் என்று கூறி விடை பெறுகிறோம்!


நன்றி வணக்கம்! 
இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்!

















Saturday, October 3, 2015

காஞ்சிபுரத்திற்கு பெருமை சேர்ப்பது கழிவு நீரா? சாயக்கழிவா?



               காஞ்சிபுரத்திற்கு பெருமை சேர்ப்பது கழிவு நீரா? சாயக்கழிவா? என்னடா பட்டிமன்ற தலைப்பு மாதிரி இருக்கே என்று நீங்கள் யோசிப்பது எமக்கு புரிகிறது! வாதம் புரிந்தாலும் வழிகிட்டாது! கடிதம் வரைந்தாலும் வழிகிட்டாது! என்பதை யாம் அறிவோம்! அதாவது காஞ்சிபுரத்திற்கு பெருமை சேர்ப்பது சாயக்கழிவும் கழிவுநீரும் இரண்டுமே என்றால் அது மிகையாகாது! 

              சரி இந்த புனித நீரால் ஏற்படும் நன்மைகள் என்ன ? இந்த புனித நீர் எந்த ஏரியில் கலக்கிறது என்பது குறித்து பார்ப்போம்!

              காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்டு  திருக்காளிமேடு வழியாக பயணித்து   நத்தப்பேட்டை எனும் விவசாய ஏரிப்பாசன நீரில் கலக்கிறது! அந்த ஏரி நிறைந்து நாசமாகி அந்த புனித நீரால் விவசாயம் கெட்டு கலியனூர் மண்ணும் கெட்டு கடைசியில் மடைமாற்றம் செய்யப்பட்டு எங்கள் பூசிவாக்கம் கிராமத்துக்கு சொந்தமான ஏரியில் வந்து அந்த புனித நீர் கலக்கிறது! 

              ஏற்கனவே ஐயம்பேட்டை, முத்தியால்பேட்டை சாயக்கழிவுகளால் பாதிக்கப்பட்ட எங்கள் ஏரிநீரும் மண்ணும் மாறுவதற்கே பலநூறு வருடம் பிடிக்கும். இந்த தருவாயில் மீண்டும் தற்பொழுது காஞ்சிபுரத்திலிருந்து வரும் இந்த கழிவுநீரால் இன்னும் எத்தனை வருடங்கள் ஆகுமோ  மண்ணின் நிறம் மாறுவதற்கு? யாரரிவார்? 

              எங்க ஊர் மண்ணோ  முக்கால்வாசி கெட்டுவிட்டது இதை யார் ஈடு செய்ய போகிறார்கள் ? 

              எங்க ஊர் ஏரியும் சாயக்கழிவால் நிறைந்து நாசமானது போதாமல் அடுத்து பலியாக போவது ஊத்துக்காடு ஏரி என்றால் அது மிகையாகாது! காஞ்சிபுரத்திலிருந்து வருவது கழிவு நீரோ..... சாயக்கழிவோ.....

பாழாய் போனதே விளைநிலங்கள்! 
பாழாய் போனதே எங்கள் ஊரின் சுற்றுப்புற சூழல்! 
பாழாய் போனதே நிலத்தடி நீர்! 


              கேட்பதற்கு நாதியில்லை! பதில் சொல்ல யாருமில்லை!
என்பதை யாமறிவோம்! இருப்பினும் இப்பொழுது இதை யாம் பதிவு செய்யாவிட்டால் வருங்கால சமுதாயம் எம்மை கேள்விகேட்குமே என்பதற்காகவும் சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்து மண்வளத்தை காப்பார்கள் என்கிற நம்பிக்கையில் யாம் இங்கே பதிவு செய்கிறோம்! 

               இனி வருங்காலத்தில் எங்க ஊரில் விவசாயம் செய்ய முடியாது இது திண்ணம்! எப்பொழுது விவசாயத்தை புறக்கணிக்கின்றோமோ அப்பொழுதே அழிவு ஆரம்பமாகிவிட்டது என்று அர்த்தம்!                     

               நிமிர்ந்து நில்!
              துணிந்து கேள்! 
              ரெளத்திரம் பழகு! 
     
              என்கிற வரிகளின் அர்த்தம் எப்பொழுது எங்க ஊர் இளைஞர்களுக்கு புரியப்போகிறதோ? யாம் அறியோம் பராபரமே! 

             இறைவா இந்த கழிவுநீரால் நாசமாகும் எங்கள் மண்ணை காப்பாற்ற வழிகாட்டு! மனிதனுக்கு மனுப்போட்டா நடவாது என்பதற்காகவே! இறைவனிடம் இந்த விண்ணப்பத்தை சமர்பிக்கிறோம்! 

மண்ணின்றி விவசாயமில்லை! 
விவசாயமின்றி அரசுமில்லை! 
கவனத்தில் கொள்வோமாக! 

நன்றி வணக்கம்! 
இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்!


Friday, September 25, 2015

மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு...




பெறுநர்: 

                மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள், 
                புது தில்லி-110001 
                WWW.narendramodi.in www.facebook.com/narendramodi             
                www.twitter.com/narendramodi 


                மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு, 
பூசிவாக்கம் கிராம பொதுமக்களின் பணிவான வணக்கங்கள்! தங்களுடைய நலனை காக்க எல்லாம் வல்ல இயற்கை அன்னை துணை நிற்பாள் என்று பரிபூரணமாக நம்புகிறோம்! 

               ஐயா இந்த கடிதத்தின் மையநோக்கம் என்னவென்றால் எங்கள் கிராமத்தின் வழியாக பயணிக்கும் காஞ்சிபுரம் சென்னை செல்லும் ரயில்கள் எங்கள் ஊரில் நின்று செல்ல ஏதுவாக ஒரு இரயில்வே நிலையம் அமைக்க வேண்டிதான் இந்த கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறோம் என்பதை பணிவோடு தெரிவித்துக்கொள்கிறோம் ஐயா! 

                எங்கள் ஊரில் இரயில் நிலையம் அமையுமானால் அருகிலுள்ள நெய்க்குப்பம், கிதிரிப்பேட்டை, புத்தகரம், பாவாசாகிப்பேட்டை, திம்மராஜாம்பேட்டை, புதுப்பேட்டை, ஏகனாம்பேட்டை, நாயகன்பேட்டை, தாங்கி, வில்லிவலம், கிராமவாழ் பயணிகளுக்கு சென்னைக்கும் இந்தியாவின் பிறபகுதிகளுக்கும் பயணிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை மிகவும் பணிவன்புடன் சுட்டிக்காட்டுகிறோம் ஐயா! 

               மேற்கூறிய கிராம பொதுமக்களின் சார்பாகவும் எங்கள் ஊர் சார்பாகவும் இந்த கடிதத்தை விண்ணப்பமாக ஏற்று இந்திய ரயில்வே துறைக்கு தங்களுடைய பரிந்துரையின் கண் எங்கள் ஊருக்கு இரயில் நிலையம் ஒன்றை அமைத்து பயணிகளின் சிரமத்தை குறைப்பீர்கள் என்று நம்பியே இந்தக்கடிதத்தை தங்களின் திருப்பார்வைக்கு அனுப்பிவைக்கிறோம்! 

வாழ்க பாரதம்! 
வாழ்க தேசியம்! 
வாழ்க தமிழகம்! 
வாழ்க தமிழர்கள்! 

இப்படிக்கு......
                                                                                                                                                                    பூசிவாக்கம் கிராமபொதுமக்கள்! 
எண்.82,பூசிவாக்கம், 
ஏகனாம்பேட்டை அஞ்சல், 
காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு. 
இந்தியா. 
தபால் பெட்டி எண்:631601

Thursday, September 24, 2015

விவசாயத்தை புறக்கணித்துவிட்டு எந்த ஒரு நாடும் வல்லரசு ஆகமுடியாது!

              



                  விவசாயத்தை புறக்கணித்துவிட்டு எந்த ஒரு நாடும் வல்லரசு ஆகமுடியாது! எப்பொழுது விவசாயிகள் மதிக்கப்படுகிறார்களோ அன்றைக்கே அந்த நாடும் மதிக்கப்படும்! விவசாயிகளை புறந்தள்ளிவிட்டு மற்றதுறைகளை வருமானத்திற்காக விருது கொடுத்து வளர்த்தாலும் வீழ்ச்சியே விளையும்! 

                 யார் நம்முடைய வயிற்றுக்காக   உழைக்கிறார்களோ   அவர்களுக்கு  பாதுகாப்பு கொடுங்கள்! சிறப்பு அடையாள அட்டை கொடுங்கள்! மிகப்பெரிய விருது கொடுங்கள்! வட்டியில்லா கடன் கொடுங்கள்! குறைந்தபட்சம் ஊர்புறங்களுக்கு வந்து ஊக்கமாவது கொடுங்கள்! முதலில் விவசாயிகளுக்கு மரியாதை கொடுங்கள்!  
மற்ற எல்லா துறையும் தானாக வளரும்!

                  மண்ணுக்குண்டானவர்களை மதிக்க தவறினால்..... விரைவில் அந்த நாடு அழியும்! மண்ணையும் மக்களையும் காக்கமுடியாத பட்சத்தில் விபச்சாரம் பெருகும், கலகநாசம் உண்டாகும், மதுவும் மாதும் மக்களை ஆட்சி செய்யும், அரசு அழியும்! வறுமை வாட்டும்! கள்ளப்பணம் பெருகும்! கறுப்பு பணம் கைமாறும்! மந்திர தந்திரங்கள் வலுபெரும்! ஆத்மீகம் அரசியல் அறம் தவறி நாசமடையும்! பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில் இருப்பார்கள்! ஆதலால் ஒரு அரசாங்கம் எப்பாடுபட்டாவது விவசாயிகளை காக்கவேண்டும் என்பதுதான் எம்முடைய பணிவான வேண்டுதல்!

                     டாக்டருக்கு அரசாங்க ஊழியருக்கு, தனியார் துறை ஊழியருக்கு, பெண்தருகிறார்கள்! விவசாயம் செய்பவருக்கு பெண் கொடுக்க மறுக்கும் ஒரு கேவலமான நிலைமையை யாம் உணர்கிறோம்! குறிப்பா சொல்லப்போனால் பெண்கள் இல்லாமல் விவசாயத்தை நினைத்துகூட பார்க்க முடியாது எனலாம்! ஆனால் இன்றைக்கு நிலைமை தலைகீழே மாறிவருகிறது! இப்பொழுதெல்லாம் கிராமத்து பெண்களை ஏற்றிச்செல்ல கம்பெனி வேன்கள் ஊருக்குள் வருவதை முன்னேற்றமாகப் பார்ப்பதா வருங்காலத்தில் வர இருக்கம் ஆபத்தாக பார்ப்பதா என்று எம்மால் நினைத்துகூட பார்க்கமுடியவில்லை! 

                    பெண்கள் விவசாயத்தை மறப்பார்களானால் பேரழிவு நிச்சையம்! இந்த நிலை நீடித்தால் மண்ணெல்லாம் பொன்னாகாது, பிளாட்டாகும்! என்று கூறி விடைபெறுகிறோம்! கூடுமானவரை மண்ணையும் உழைக்கும் மக்களையும் காப்பாற்றுவோம்!

வானின்றி நீரில்லை!

நீரின்றி உலகமில்லை! 

மண்ணின்றி விவசாயமில்லை! 

விவசாயமின்றி அரசுமில்லை! 

கவனத்தில் கொள்வோமாக! 

நன்றி வணக்கம்! 
இப்படிக்கு 

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்!


Tuesday, September 22, 2015

வணக்கம் பண்பலைக்கு ஓர் கடிதம்!

     


                வணக்கம் பண்பலைக்கு வணக்கம்! கடந்த நான்கைந்து நாட்களாக இணையத்தின் ஊடாக வணக்கம் பண்பலை கேட்க நேர்ந்தது! ஒரிரு நிகழ்ச்சிகள் மட்டுமே கேட்க முடிந்தது! 

                அந்த வகையில் தூங்க நகரம் நிகழ்ச்சி மட்டுமே எங்களுக்கு பகலில் கேட்ககூடிய நிகழ்ச்சி! மற்ற நிகழ்ச்சிகள் ஒரு சில நிமிடம்தான் எம்மால் கேட்க முடியும்!

               தமிழ்நாட்டில் தமிழ் பண்பலைகளுக்கு பஞ்சமே இல்லை எனலாம்! இருப்பினும் கடல்கடந்து கேட்கும்போது ஏதோவொன்று எம்மை ஈர்க்கவே செய்கிறது! கேட்க இனிமையாக இருக்கிறது!

               பொதுவா கேட்பவருக்கு விருப்பம் இல்லையென்றால் எவ்வளவு நுட்பமான இசையென்றாலும் இரைச்சலாகத்தான் கேட்கும்! தொகுப்பாளர்கள் முழு ஈடுபாடுடன் தொகுத்தளிக்கும் நிகழ்ச்சி அனைவராலும் விரும்பப்படும்! 

               இயந்திரத்தனமான தொகுப்பாளர் ஒரு கூலி ஆள்மட்டுமே! இயல்பான ஒரு தொகுப்பாளர் எந்தப்பாடலை ஒலிபரப்பினாலும் இனிமையே!

               வணக்கம் பண்பலையில் பணியாற்றும் அனைவருக்கும் வணக்கம் கூறி விடைபெறுகிறேன்!

பெருமை கொள் தமிழா!

வாசகம் உற்சாகம்!

 அருமை!

நன்றி வணக்கம்!

இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்!