விவசாயத்தை புறக்கணித்துவிட்டு எந்த ஒரு நாடும் வல்லரசு ஆகமுடியாது! எப்பொழுது விவசாயிகள் மதிக்கப்படுகிறார்களோ அன்றைக்கே அந்த நாடும் மதிக்கப்படும்! விவசாயிகளை புறந்தள்ளிவிட்டு மற்றதுறைகளை வருமானத்திற்காக விருது கொடுத்து வளர்த்தாலும் வீழ்ச்சியே விளையும்!
யார் நம்முடைய வயிற்றுக்காக உழைக்கிறார்களோ அவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்! சிறப்பு அடையாள அட்டை கொடுங்கள்! மிகப்பெரிய விருது கொடுங்கள்! வட்டியில்லா கடன் கொடுங்கள்! குறைந்தபட்சம் ஊர்புறங்களுக்கு வந்து ஊக்கமாவது கொடுங்கள்! முதலில் விவசாயிகளுக்கு மரியாதை கொடுங்கள்!
மற்ற எல்லா துறையும் தானாக வளரும்!
மண்ணுக்குண்டானவர்களை மதிக்க தவறினால்..... விரைவில் அந்த நாடு அழியும்! மண்ணையும் மக்களையும் காக்கமுடியாத பட்சத்தில் விபச்சாரம் பெருகும், கலகநாசம் உண்டாகும், மதுவும் மாதும் மக்களை ஆட்சி செய்யும், அரசு அழியும்! வறுமை வாட்டும்! கள்ளப்பணம் பெருகும்! கறுப்பு பணம் கைமாறும்! மந்திர தந்திரங்கள் வலுபெரும்! ஆத்மீகம் அரசியல் அறம் தவறி நாசமடையும்! பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில் இருப்பார்கள்! ஆதலால் ஒரு அரசாங்கம் எப்பாடுபட்டாவது விவசாயிகளை காக்கவேண்டும் என்பதுதான் எம்முடைய பணிவான வேண்டுதல்!
டாக்டருக்கு அரசாங்க ஊழியருக்கு, தனியார் துறை ஊழியருக்கு, பெண்தருகிறார்கள்! விவசாயம் செய்பவருக்கு பெண் கொடுக்க மறுக்கும் ஒரு கேவலமான நிலைமையை யாம் உணர்கிறோம்! குறிப்பா சொல்லப்போனால் பெண்கள் இல்லாமல் விவசாயத்தை நினைத்துகூட பார்க்க முடியாது எனலாம்! ஆனால் இன்றைக்கு நிலைமை தலைகீழே மாறிவருகிறது! இப்பொழுதெல்லாம் கிராமத்து பெண்களை ஏற்றிச்செல்ல கம்பெனி வேன்கள் ஊருக்குள் வருவதை முன்னேற்றமாகப் பார்ப்பதா வருங்காலத்தில் வர இருக்கம் ஆபத்தாக பார்ப்பதா என்று எம்மால் நினைத்துகூட பார்க்கமுடியவில்லை!
பெண்கள் விவசாயத்தை மறப்பார்களானால் பேரழிவு நிச்சையம்! இந்த நிலை நீடித்தால் மண்ணெல்லாம் பொன்னாகாது, பிளாட்டாகும்! என்று கூறி விடைபெறுகிறோம்! கூடுமானவரை மண்ணையும் உழைக்கும் மக்களையும் காப்பாற்றுவோம்!
வானின்றி நீரில்லை!
நீரின்றி உலகமில்லை!
மண்ணின்றி விவசாயமில்லை!
விவசாயமின்றி அரசுமில்லை!
கவனத்தில் கொள்வோமாக!
நன்றி வணக்கம்!
இப்படிக்கு
பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்!
No comments:
Post a Comment