விழிப்புணர்வு உள்ளவன் விநாயகன்!
விருப்பு வெறுப்பு உள்ளவன் வில்லன்!
கண்களை ஆள்பவன் கணபதி!
கண்களை சுழிமுனையில் குவிக்காமல் போனால் கிடைக்குமா நற்கதி?
நம்முடைய மனம் சித்தம் புத்தி அகங்காரம் ஒன்றுபட்டால் சதுர்த்தி! மேற்கூறிய நான்கும் நமக்கு ஒன்றுபடாவிட்டால் விரக்தி!
இருகண்களால் மூன்றாவது கண்ணை தொட்டவன் கணேசன்!
அவனின்றி நமக்கேது பிரமோசன்!
ஆரம்பம் அவனுக்கு ஆணைமுகம்!
அவனே ஊழிக்காலத்தில் எடுத்தான் குரங்குமுகம்!
நம்முடைய முகம்தாண்டா மூலாதாரம்!
பாவிகளின் வாதமோ மூத்திர துவாரம்!
ஆதியாம் தும்பிக்கையும்நம்பிக்கையும் அவனே!
அந்தமாம் வாலில் வனத்தை அழிப்பவனும் அவனே!
தந்தையாம் அறிவுக்கும் தாயாம் அன்பிற்க்கும் பிறந்த பிள்ளை!
இந்த உண்மையை உணராதவனுக்கு அவன் எப்பொழுதுமே பொல்லாப் பிள்ளை!
விக்கினத்தை எதிர்கொள்பவன் விக்கி!
விக்கினத்தை கடக்காதவனுக்கு கிட்டுமா லக்கி?
மொத்தத்தில் ஆங்காரம் கடந்து ஓங்காரம் கண்டவன் விநாயகன்!
கண்டவள் விநாயகி!
இப்படிக்கு...
பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்!
www.natrajcosmic3.yolasite.com
No comments:
Post a Comment