Sunday, September 20, 2015

அசைவம் ஆபத்து! கொலை செய்யப்பட்ட பிணத்தை உண்ணக்கூடாது!

                 எரியும் விறகை பிடுங்கிவிட்டால் கொதிக்கின்ற உலை நின்றுவிடும்! அதுபோல் நம்முடைய எண்ணம்! சொல்! செயல்! சரியாக இருந்தால்தான் எதையும் சரியாக செய்ய முடியும்! 

                 எண்ணம் தவறாகிப்போனால் சொற்கள் தவறாகிவிடும்! சொற்கள் தவறாகினால் ஒருவன்/ஒருத்தியின் செயல் அல்லது நடத்தை தவறாகிவிடும்! நடத்தை கெட்டவன் அல்லது நடத்தை கெட்டவள், இந்த இருவராலும் நற்காரியங்களை தனக்கோ தன்னுடைய குடும்பத்திற்கோ அல்லது ஊருக்கோ உலகத்திற்கோ ஒருபோதும் நன்மை செய்ய முடியாது!

                 காரணம் மேற்கூறியதுபோல எண்ணமும் சொல்லும் நடத்தையும் தவறாகிப்போனதின் விளைவேயாகும்! சரி இனி இந்த எண்ணம், சொல், செயல் இம்மூன்றையும் சரியாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்? 

                 ஒரே வழி சைவம்தான்! அசைவம் ஆபத்து! உயிர்கொலை செய்ய கூடாது! பிறகு கொலை செய்யப்பட்ட பிணத்தை உண்ணக்கூடாது! தேவையில்லாத மாமிசங்களை உண்பதால் தேவையில்லாத உணர்ச்சிகளை தூண்டி நம்முடைய சிந்திக்கும் திறனை அழித்துவிடும்! 

                 கொலை செய்யலாம்..... எப்பொழுது என்றால் நம் உயிருக்கே ஆபத்து நேரும்போது! மற்றபடி நம்முடைய உணவை மாற்றிவிட்டால் குணத்தை மாற்றிவிடலாம்! 

முட்டை சாப்பிட்டால் புத்தி வேலை செய்யாது!

 மாடு சாப்பிட்டால் மனம் வேலை செய்யாது!

 ஆடு சாப்பிட்டால் அடிமைத்தனம் பெருகும்! 

கோழி சாப்பிட்டால் சூடு உற்பத்தியாகி சேவல் சண்டை ஓயாது என்பதுபோல் நாமும் சண்டையிட்டு சாகவேண்டியதுதான்!

                   மொத்தத்தில் சைவ உணவே! எண்ணம்! சொல்! செயல்! இவைகளை சரியாக வைத்திருக்கும் என்பது எம்முடைய தாழ்மையான கருத்து!

நன்றி வணக்கம்!

 இப்படிக்கு!
 பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்! 

No comments:

Post a Comment