ஓம் என்ற சப்தம் எப்பொழுதும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது! அந்த சப்தம் வெளியில் இல்லை, உள்ளே! என்று கவனித்தவர்கள் தியானிக்க முயல்கிறார்கள் கவனிக்க முடியாதவர்கள் பாவம் போர் அடிக்கிறது என்கிறார்கள்!
தவம் பழகினால் நான் என்கிற செருக்கு குறைவதை உணரலாம்! அப்படி பழகிக்கொண்டே வரும்போது எங்கே இந்த பூமியில் அடையாளம் இல்லாமல் போய்விடுமோ என்று பயந்து நம்முடைய நான் மிகுந்த வேதனைக்குள்ளாகிறது! ஆனால் ஒரு தவசி தன்னுடைய அகங்காரத்தின் புலம்பலை மனம் சித்தம் புத்தியைக்கொண்டு சிகிச்சை அளித்து சமாதானத்திற்கு ஏற்பாடு செய்கிறார்!
பாவம் தவமே கைகூடாதவர்களுக்கு தன்னுடைய நான் வழிப்பட்டு மனம் சித்தம் புத்தியை துலைத்துவிடுவார்கள்! இதுதான் தவசீலர்களுக்கும் பாமரர்களுக்கும் உள்ள பெரிய வேறுபாடு! மனமே அனைத்திற்கும் காரணமாகவும் காரியமாகவும் இருக்கிறது!
இறைவன் மின்சாரம்! என்றால் இறைவி! மின்சாரத்தை கடத்தும் கம்பி எனலாம்! நம்முடைய மனமே மின்சாரத்தை பாதுகாப்பதும் செலவழிப்பதும் அதற்கான கருவிதான் மெய் வாய் கண் செவி மூக்கு இது பிறப்பொக்கும் எல்லாவுயிருக்கும் பொருந்தும்!
இந்த உண்மையை தனக்குள்ளே கடந்து பார்க்கவே கட+ உள் என்றார்கள்! ஏன் கட வுள் என்று சொல்லவேண்டும் இறைவன் உயிராக அதாவது மின்சாராமாக அனைத்து உயிர்களுக்கும் உயிராக இருக்கிறான் என்பதை அறிந்துகொள்ளவே கட வுள் என்ற வினைச் சொல்லை பயன்படுத்தினார்கள்! அப்படி தவம் செய்து அந்த மின்சாரத்தை புரிந்து கொண்டவர்கள் எவ்வுயிரும் தம்முயிரே என்பதை உணர்ந்து கொண்டார்கள்!
உணராதவர்கள் இறைவனை தேடியே மாண்டு போனார்கள் என்பதுதான் உண்மை!
நன்றி வணக்கம்!
இப்படிக்கு!
பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்!
No comments:
Post a Comment