Thursday, September 17, 2015

பில்லி சூனியம் செய்வினை செயப்பாட்டு வினை!

                பில்லி சூனியம் செய்வினை செயப்பாட்டு வினை! மந்திரம்! தந்திரம்! எந்திரம்! வசியமருந்து! கட்டுதல்! இவைகள் எல்லாம் உண்மையா? பொய்யா?


                   மேற்கூறிய அனைத்தும் உண்மையே என்கிற கூற்றுபடி பார்க்கப்போனால் இவைகள் எல்லாம் யாருக்கு பலிக்கும் யாருக்கு பலிக்காது என்பது குறித்து பார்ப்போம்! 

                முதலில் யாருக்கு பலிக்காது என்பது குறித்து பார்ப்போம்!
 யார் ஒருவர் தன்னுடைய உடல் பொருள் ஆவியை எல்லாம் வல்ல "இயற்கையிடம் அதாவது இறைவனிடம் சரணடைந்து தன்னை ஆள்வது தான்தான் என்பதை உணர்ந்தவர்களை பஞ்சமா பாதகங்களை செய்யாதவர்களை மேற்கூறிய அனைத்தும் இவர்களை ஒன்றுமே செய்ய முடியாது" இவர்களை இறைவன் மட்டுமே சோதிக்க முடியும்! 
அடுத்து இவர்களுக்கு ஏதாவது செய்ய நினைத்தாலோ அல்லது செய்தாலோ அந்த கேடு தனக்கு என்பதை புரிந்துகொள்வார்கள்! அதாவது உத்தம புருஷர்களுக்கு உத்தமிகளுக்கு பலிக்காது! 

             சரி யாருக்கு பலிக்கும் என்பது குறித்து பார்ப்போம்! அடுத்தவர் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத பொறாமை குணம் உள்ளவர்களுக்கு மேற்கூறிய அனைத்தும் பலிக்கும்! குறுக்கு வழியில் சாதிக்க நினைப்பவர்களை பெரிதும் பாதிப்பது மேற்கூறியவைகள்தான்! இவர்களை மையமாக வைத்தே பில்லி சூனியம் வைக்க எடுக்க போன்ற நிறுவனங்கள் பெரிதும் இயங்கிவருவதை அன்றாடம் செய்திதாள்களில் வாசிக்க காண்கிறோம்!

                சரி மேலும் யாருக்கெல்லாம் பலிக்கும் என்று பார்ப்போம் திருடர்களுக்கு பலிக்கும்! கொலை கொள்ளை அடிப்பவர்களுக்கு பலிக்கும்! மச்ச மாமிசம் திண்பவர்களுக்கு பலிக்கும்! அறியாமையில் உள்ள பலவீன மனமுடையவர்களுக்கு பலிக்கும்! உடல் மனம் உயிர் தூய்மையில்லாதவர்களுக்கு பலிக்கும்! முறைதவறிய காதல் புரியும் அனைவரும் இதில் சிக்கி கொள்வார்கள் அதனால் இவர்களுக்கு பலிக்கும்! மொத்தத்தில் சுயபுத்தி இல்லாதவர்களுக்கு மேற்கூறிய அனைத்தும் பலிக்கும்!

       சரி மேற்கூறியவகள் அனைத்தும் பொய்யே என்கிற கூற்றுப்படி என்னவென்று பார்ப்போம்! 

               படித்த பட்டதாரிகள் அறிவுஜீவிகள் மேற்கூறிய அனைத்தும் மூடநம்பிக்கைகள் என்கிற ஒரே வார்த்தையில் தங்களுடைய கருத்தை முன்வைப்பார்கள்! இப்படிப்பட்டவர்கள் மனோபலமும் நான் என்கிற அகந்தையும் வாசிப்பு கர்வமும் இவர்களுக்கு பக்கபலமாக இருப்பதாலும் இரத்தத்தின் வேகம் இருக்கும்வரை மேற்கூறியவைகள் இவர்களை பாதிப்பதில்லை! இவர்கள் பார்க்க சீர்திருத்த வாதிகளைப் போல் காட்சியளிப்பார்கள்! எல்லாத் தவறுகளுக்கும் அறிவியல் காரணம் கற்பிப்பார்கள் இவர்களை வாதத்தில் வெல்ல முடியாது! இயற்கை இவர்களுக்கு தக்க பாடம் கொடுத்து ஆட்கொள்ளும் போதுதான் திருந்துவார்கள்! சரி இவர்களை மேற்கூறிய பில்லி சூனியம் எப்பொழுது பாதிக்கும் என்றால் நம்மை கேள்வி கேட்பதற்கு யாருமில்லை எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்கிற எண்ணம் இவர்களுக்குள் நுழைந்து தீய பழக்கங்களுக்கு ஆளாகும்போது இவர்களுக்கு பலிக்கும்!
 அறிவியலை காரணம்காட்டும் இவர்கள் உடல்பலம் குறையும்போது மனோபலமும் குறையும் அப்பொழுதுதான் எல்லாம் வல்ல இயற்கையிடம் சரணடைவார்கள்! 

                  உளவியல் பயின்றவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் புறக்காரணங்களை மட்டுமே விளக்க முடியும்!                                              


 முடிபு! 

                  மொத்தத்தில் படித்தவர்களை பில்லி சூனியம் பாதிப்பதில்லை! அவர்கள் மனோபலம் குறையும்போது பயத்தினால் படித்தவர்களும் பலியாகிறார்கள்! படித்த கயவர்களும் பில்லி சூனியத்தை கையாள்வதுதான் கொடுமை! படித்த பணக்காரர்களும் தங்கள் பொல்லா வினையாலும் பேராசையினாலும் பில்லி சூனியத்தில் சிக்கிக்கொள்கிறார்கள்!

                   உண்மையோ! பொய்யோ! சூனியம் என்பது அவரவர் மனமே! இந்த மனமே அனைத்திற்கும் காரணமாகவும் காரியமாகவும் இருப்பதால் அந்த மனத்தை செம்மையாக வைத்துக்கொண்டால் போதும்! செய்வினை செயப்பாட்டு வினை உங்களை மீறி நிகழாது! மேலும் தன்னுடைய ஜீவசக்தியை தவறாக பயன்படுத்தும் சூனியக்காரர்களும் சூனியக்காரிகளும் இருக்கவே செய்கிறார்கள்!  
நன்றி வணக்கம்!


 இப்படிக்கு!
 பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்! 

No comments:

Post a Comment