தாழ்த்தப் பட்டவர்கள் என்று அனைவராலும் அழைப்பதை எம்மால் ஒருபோதும் ஏற்கமுடியாது! காரணம் என்னவென்றால் என்றைக்காவது நாம் எதில் தாழ்ந்துவிட்டோம் என்று என்றைக்காவது யோசித்திருப்பீர்களா?
பொதுவாக இந்த பசி, தாகம், மலம், மூத்திரம், விக்கல், தும்மல், பாலினக்கவர்ச்சி வலி, வேதனை, இன்பம் துன்பம்! போன்ற பொதுவான உணர்ச்சிகள் அனைத்தும் மனிதகுலத்திற்கே உரியதுதானே இதில் எதில் நாம் தாழ்ந்துவிட்டோம் என்று சிந்திக்க துவங்கும்போதுதான் ஒரு உண்மை புலப்பட்டது!
அது என்னவென்றால் மனதளவில் நம்மை தாழ்த்தி பலவீனமானவர்களாக மாற்றுவதற்கே தந்திரமாக தாழ்த்தப்பட்டவர்கள் என்கிற தாழ்வுமனப்பான்மையை இளமையில் விதைத்துவிட்டால் உயர்ந்த எண்ணங்களும் ஒழுக்கமும் சுகமும் இவர்களுக்கு கிடைக்ககூடாது என்பதற்காகவே உளவியல் ரீதியாக தாழ்த்தப்பட்டவர்கள் என்று அழைக்கிறார்கள்!
தாழ்வு மனப்பான்மையை அகற்றுவோம்!
ஒழுக்கத்தால் உயர்வோம்!
ஒரு நாள் நம்மை தாழ்த்தும் கயவர்களை திருந்த வகைசெய்வோம்!
நன்றி வணக்கம்!
இப்படிக்கு!
பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்!
பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்!
No comments:
Post a Comment