அன்பர்களுக்கு வணக்கம்! அன்னையும் பிதாவும் என்கிற தலைப்பில் உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி! அன்னையே நமக்கெல்லாம் ஆதிகுரு என்பதை யாராலும் மறுக்க முடியாது! ஈன்று புறம்தந்தவுடன் குப்பைத் தொட்டிகளில் குழந்தைகளை தவழவிடும் தாய்மார்கள் இருக்கவும் செய்கிறார்கள்! மொத்தத்தில் ஒரு தாய் நினைத்தால் தன்மகவை சான்றோனாகவும் மாற்றமுடியும் தறுதலையாகவும் மாற்றமுடியும்! சரி இந்த அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்கிறார்கள் இது புறம் சார்ந்த விளக்கம் இல்லையா? இனி இதன் அகம் சார்ந்த விளக்கம் என்னவென்று பார்ப்போம் உண்மையில் நம்மை காப்பது இரத்தம் என்று சொன்னால் உங்களால் நம்ம முடியுமா? நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நம்மை காப்பது இரத்தம்தான்! இந்த இரத்தம் இல்லாவிடில் உயிர்ப்பில்லை! இந்த இரத்தம்தான் உடலை இரட்சிக்கிறது! இந்த இரத்தம்தான் நமக்கெல்லாம் அன்னையாகிறது! நம்முடைய உடலில் இரத்தமாக இருக்கும் அன்னையை இயக்குவது வாயு என்கிற வாசி என்கிற உயிர்காற்று! மேலும் கீழும் உடல்முழுவதும் சக்தியாகிய இரத்ததை கொண்டு செல்லும் வாயுவுக்கே வாசிக்கே அல்லது உயிர்காற்றுக்கே பிதா என்று பெயர்! கருவுற்ற நாள்முதல் நம்மை கண்ணயறாமல் காக்கும் இறைவனே பிதா நம்முடைய மூச்சு! காக்கும் இறைவி அன்னை நம்முடைய இரத்தம்! இதை அறிந்தவன் அறிந்தவள் தெய்வம் என்பதைத்தான் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று கூறியிருப்பார்கள் என்று கூறி யாம் விடை பெறுகிறோம்! நன்றி! வணக்கம்!
No comments:
Post a Comment